Quotes & Status

100+ Inspirational Tamil Quotes You will Regret to Miss

Tamil is a prominent language that is usually spoken in the states of Tamilnadu in India.Tamil is a Dravidian language predominantly spoken by the Tamil people of India and Sri Lanka, and by the Tamil diaspora, Sri Lankan Moors, Burghers, Douglas, and Chindians. Tamil is an official language of two countries these countries are Sri Lanka and Singapore. In Today’s post, I made a special collection of all Tamil quotes and Tamil status for Facebook and WhatsApp. I know Tamils will love it for sure.

Inspirational Tamil Quotes abour Life

மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய் மதிப்பது நம் கடமை.

மனிதக்கணக்கில் வாழ்வு பெரிது:காலக்கணக்கில் வாழ்நாள் சிறிது.

எரிகின்ற விளக்காய் இரு.அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்க முடியும்.

மகிழ்ச்சியோடு சுமந்தால் எந்தப்பாரமும் குறைவாயிருக்கும்.

துன்பத்துக்கோ கோபத்துக்கோ இடங்கொடுப்பவர்கள் அடிமைப்பட்டு விடுகின்றனர்.

ஒருபோதும் போராடமலே இருப்பதைவிட போராடித்தோற்பதே மேல்.

நாம் எதை இழந்துவிட்டாலும் கௌரவத்தை மட்டும் இழக்க இடம் தரக்கூடாது.

இலட்சியமில்லாத மனிதன் திசை காட்டும் கருவி இல்லாத கப்பலுக்கு ஒப்பாவான்.

உங்களுக்கு உதவி தேவையா? அதை உங்களிடமே கேட்டுப்பெறுங்கள்.

பிராத்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.

நெருக்கடியின் போது நிதானத்தை கடைப்பிடிப்பது மிகப்பெரிய பலம்.

கோபம் அன்பை அழிக்கின்றது.செருக்கு அடக்கத்தை அழிக்கின்றது.

தன்னம்பிக்கையை இழக்கிறவன் தன்னையே இழக்கிறான்.

உன்னை அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு. சுதந்திரம் தருபவர் முன் அடங்கிவிடு.

நாடு நலம் பெற வீட்டுக்கு ஒரு புத்தகசாலை வேண்டும்.

உண்மையான புகழ் எந்த சந்தர்ப்பத்திலும் தற்செயலாக வருவதில்லை.

நம்பிக்கை உள்ளே காத்திருந்தால் வாழ்க்கை வெளியே காத்திருக்கும்.

உழைப்பே ஓய்வுக்கு திறவுகோல்.சுறுசுறுப்பே செல்வத்திற்கு திறவுகோல்.

பொறாமை பேராசை கோபம் கடுஞ்சொல் இவை நான்கும் விரோதிகள்.
உங்களது வேலையை நேசியுங்கள்.வாழ்க்கையையும் யோசியுங்கள்.

பிரிவு உறவை வளர்க்கும் . ஆனால் அடிக்கடி பிரிவது கசக்கும்.

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது

ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்

தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம்
தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு
கொண்டு வந்துவிடும்.

நடைமுறைக்கு ஏற்ற வழியில் கனவு காணுங்கள்.

நட்பு எப்போதும் ஒரு இனிமையான பொறுப்பே தவிர அது ஒருபோதும் வாய்ப்பு அல்ல.

நண்பரிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பரிசும் உங்கள் மகிழ்ச்சிக்கான விருப்பமே.

நன்றி என்பது ஆன்மாவிலிருந்து மலரக்கூடிய சிறந்த அரும்புகளைப் போன்றது.

நமது இன்றைய தினத்தை தியாகம் செய்வதன்மூலம், நமது குழந்தைகள் அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தைப் பெற முடியும்.

நமது மேலாதிக்க எண்ணங்களின் விளைவுகளையே நமது வாழ்க்கை எப்போதும் பிரதிபலிக்கின்றது.

நமது விருப்பத்தின் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிய கவலைகளை நிறுத்துவதே நமது மகிழ்ச்சிக்கான ஒரே வழி.

Positive, Wisdom and success Tamil Quotes With Images

அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது

இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.

இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது.

உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே

சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே.

தன்னம்பிக்கை,தெளிவு,துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை

ஆசையே துன்பத்தின் அடிப்படை.

இன்பமும் துன்பமும் இரவு பகல் போன்றது. அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான இரு வழி உரையாடலே பிரார்த்தனை.

உலகம் மெய் என்ற அபிப்ராயத்தை விட்டொழிக்காவிட்டால் மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.

எங்கு ஒற்றுமை இருக்கிறதோ அங்கு வேற்றுமையுண்டு. எங்கெல்லாம் வாழ்வு தென்படுகிறதோ அங்கெல்லாம் சாவுமுண்டு.

ஏழை எளியவர்கள் நடமாடும் கோவில்கள். அவர்களுக்கு உதவி செய்தால் கடவுள் மகிழ்கிறார்.

ஒருவருக்கு தீவிரமாக சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதே கல்வியின் செயல்பாடு.

கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்

காட்டில் ஒளிந்தாலும் கூட சம்சார பந்தம் மனிதனை விட்டு எளிதில் நீங்காது.

கொடுக்கின்ற மனம் மனிதனுக்கு இல்லாவிட்டாலும், பிறர் கொடுப்பதைத் தடுக்க முயல்வது கூடாது.

கோபம் வந்து விட்டால், இமைப் பொழுதில் நண்பர்களும் பகைவர்களாக மாறி விடுவர்.

Best Love quotes in Tamil

நீ மறந்துபோன ஞாபகம் நான்…

சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும் நேசிக்க உன் நினைவுகள் இருந்தால் போதும் நான் உயிர் வாழ..

பேசியது நினைவில்லை.. பேச போவது தெரியவில்லை.. ஆனால், பேசி கொண்டே இருக்க வேண்டும் உன்னோடு மட்டும்.. உயிருள்ளவரை..!

காதலியை மனைவியாக்க துணிவு தேவை..! மனைவியை காதலியாக்க கனிவு தேவை..!!

நான் இறக்கும் நிலை வந்தாலும் உன்னை மறக்கும் நிலை வராது..

காரணம் இல்லாமல் யார் மீதும் காதல் வருவதில்லை.. ஆனால் அந்த காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை..

அலை கடலும் உன் அன்பும் ஒன்றுதான்.. இரண்டும் ஓய்வதே இல்லை..

நீ உதிர்க்கும் சொற்களுக்கு மயங்காவிடினும் உன் உதடுகளின் அசைவிற்கு நான் மயங்கி தான் ஆக வேண்டும்..!

உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.. அதற்கான அகராதியையும் நீயே எழுதிவிடு உன் கரு விழிகளால்..!!

உன் அழகை ஆராதிக்கக் கடமை பட்டவனாய் நானும்.. உன் அழகால் என்னை அணுஅணுவாய் கொலை செய்யும் கொலைகாரியாய் நீனும்..!!

என்னை பார்க்கும் போதெல்லாம் பொய்க்கோபம் கொள்கிறாய்.. எனக்குத் தெரியும் அது கோபமில்லை வெட்கம் என்று..

கண்ணீரும் இனிக்கும்.. காத்திருப்பும் பிடிக்கும்.. தோழி நீ அருகில் இருக்கும் பொழுதுகளில்..

ஒரு பெண் சிரிக்கும்போது, அழகாக இருப்பாள்.. அவளை சிரிக்க வைத்து ரசிக்கும் ஒரு ஆண்
அதை விட அழகாக தெரிவான்..!

வெறுத்து போகிறவரை விரட்டிப் பிடிப்பது தவறு… என்று அறிவுக்கு தெரிந்தாலும் இதயத்திற்கு தெரிவதில்லை…!!

கிடைக்கும் பொழுது பெற தவறினால், தேடும் பொழுது கிடைக்காது..!! – “அன்பு”

உண்மையான அன்பை புரிந்து கொள்ளும் ஒரு அழகான சந்தர்ப்பம் தான் பிரிவு..!

அழுகையை நிறுத்தி சிரிக்க வைக்க முடியுமென்றால், அது உண்மையாய் நேசிப்பவர்களால் மட்டுமே சாத்தியமாகும்..!!

எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ அவள் தான் அந்த ஆணின் மொத்த எதிர்காலமுமாக ஆகிறாள்…

உண்மையான அன்புக்கு பிரிவு என்பது ஒரு தொடக்கம் தான்..!!

————–

Best Collection of Sad Tamil quotes

நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை விட, என்ன இல்லை என்று ஆராய்ந்து கேலி பேசுவதில் தான் இந்த உலகம் அதிக அக்கறை கொள்கிறது..

நாம் சிரிக்க வைப்போரை சீக்கிரமே மறந்தாலும், அழ வைப்போரை ஆயுள் வரை மறப்பதில்லை..!

எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்கு வெட்டத்தான் தெரியும்.. அது போல்தான் சில உறவுகளும் எவ்வளவு அன்பாக நாம் இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள்..

உங்களை யாராவது நிராகரித்தால் கவலைப்படாதீர்கள்.. பெரும்பாலும் மக்கள் விளையுயர்ந்தவற்றை தான் வாங்க இயலாமல் நிராகரிக்கின்றனர்..

உண்மையாக நேசிப்பவர்களை ஒரு நிமிடம் கண்களை மூடி நினைக்கும் போது பிரிவின் ஏக்கம் விழியோரம் கசிகின்ற கண்ணீர் துளிகளில் தெரியும்..

வாழ்க்கையில் எது ஒன்று அதிக இன்பத்தை தருகிறதோ, அதுவே சில வேளைகளில் அதிக துன்பத்தையும் தந்துவிடுகிறது..

நீ அளித்த அன்பளிப்புகளிலேயே அற்புதமான அன்பளிப்பு இந்த வேதனைதான்..

எதிர்பார்ப்பது ஏமாற்றம் என்பதை அறிந்தும், அன்பை எதிர்பார்த்து காத்திருப்பதே வாழ்க்கை..

யாரோ ஒருவரின் நிராகரிப்புக்காக வருந்தாதீகள்..
யாரோ ஒருவரால் நிராகரிக்கப் பட்டது, ஒருவரால் நேசிக்கப்படுகின்றது…

உன்னை புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரிந்தால் மற்றவர்களைப் புண்படுத்துவது எது என்பது உனக்கு தெரியும்..

“கவலைப்படாதே” என்பதை விட, “நான் பார்த்துக்கிறேன்” என்பதே சிறந்த ஆறுதல்..

வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்.. ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்..!

Also Read :

marathi status, tired status, move on status

நம் வாழ்விலிருந்து விலகுபவர்களை விரட்டிப் பிடிக்க நினைப்பது முட்டாள் தனமான ஒன்று…

நீ யாருக்காககும் கண்ணீர் சிந்தாதே.. உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழவிட மாட்டார்கள்..

உன்னை பற்றிய அதீத தேடலில் நான் தொலைத்தது என் நிம்மதியையும் வாழ்க்கையையும்…!

ஒருவரை கஷ்டப்படுத்தி நீ தேடும் சந்தோஷம்.. உனக்கு எப்போதும் நிலைக்காது..

மனதிற்கு மிகவும் பிடித்தவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். மரண வலி கூட பறந்து போய் விடும்..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..! இரண்டுமே உன்னை காயப்படுத்தும்..!

காரணம் இல்லாமல் விலகி போனவர்களிடம் போய் காரணம் கேட்டு நிற்பது நமக்கு நாமே தேடிக் கொள்ளும் அவமானம்..

ஒருவருக்கு நம்மை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் மீது நாம் காட்டும் அன்பு தொல்லையாகத்தான் தெரியும்…

நான் சாகும் வரை என்னை சாகடித்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்…

பல தருணங்களில் தனிமை மட்டுமே நினைவுகளின் வலியை உணர்த்துகிறது…

காய படுத்த பலர் இருந்தாலும், மருந்தாக சிலர் இருப்பதாலேயே நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது..

கவிதைக்கு தெரியாது கண்ணீரின் வலி..! ஆனால் கண்ணீருக்கு புரியும் கவிதையின் வரி..

அன்பு கொண்டதே தவறு என்று சிலரை நம்பி வாழ்க்கையை தொலைத்த பின்புதான் புரிகிறது…

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *